“ஐம்பெரும் காப்பியமாய் பஞ்ச பூதங்களாய்…”; மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான படம் ‘கர்ணன்’ . மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி படமாக அமைந்தது. அத்தோடு மட்டுமில்லாமல், ரசிகர்கள், திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் படக்குழுவினர் பாராட்டினார். 

இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. தனுஷின் 57வது படமாகவும் மாரி செல்வராஜின் 6வது படமாகவும் இப்படம் உருவாகிறது. இந்த நிலையில் கர்ணன் படம் வெளியாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி மாரி செல்வார், “அவன் வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு நினைவு உயிர்பெற்று 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு பயணம் உண்மையாகவே வாழ்ந்து பார்க்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவனுக்கு உயிரூட்டியதற்கு தனுஷுக்கு நன்றி. ஒலி முதல் காட்சி வரை, கதை வரை—இதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி” எனக் குறிப்பிட்டு தயாரிப்பாளர் தாணு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், படத் தொகுப்பாளர் செல்வா ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

அதே போல் தயாரிப்பாளர் தாணு, “சிலப்பதிகாரம், மணிமேகலை சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி. நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று… ஐம்பெரும் காப்பியமாய் பஞ்ச பூதங்களாய் ‘கர்ணன்’. வெற்றிக்கு வித்திட்ட வித்தகர்கள் தனுஷ் – மாரி செல்வராஜ் என்றும் மகிழ்வுடன்.. நெகிழ்வுடன்” எனத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாழ்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளர். 

Source link