நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் ஆதரவளிக்க வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழகத்தின் வளர்ச்சியை பின்னோக்கி கொண்டு செல்கின்றனர். திமுக ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் – ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது. டாஸ்மாக் முறைகேடு, அரசு வேலைக்கு பணம் என்பன போன்ற குற்றச்சாட்டுகளால், தமிழ்நாட்டின் பெருமையை திமுக ஆட்சியில் மாநிலம் இழந்து வருகிறது.
திமுக கடந்த தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தமிழகத்தின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு இந்த அரசு கொண்டு சென்றுள்ளனர்.
தமிழக மக்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு நிதிகளை வழங்கியபோதும் அதனை மாநிலத்தின் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்கு திமுக அரசு பயன்படுத்தாமல் அதிலும் முறைகேடுகள் செய்து வருகின்றனர்.
