திருநெல்வேலி: திருநெல்வேலியில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது, டூ – வீலர்களில் அத்துமீறி சென்ற இளைஞர்கள்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது, டூ – வீலர்களில் அத்துமீறி சென்ற இளைஞர்கள் மற்றும் அவர்களை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திருநெல்வேலியில் நேற்று த.வெ.க., தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் ‘ரோடு ஷோ’ சென்றபோது, அவரது வாகனத்தை சிலர் டூ – வீலர்களில் பின் தொடர்ந்தனர். தாழையூத்திலிருந்து தச்சநல்லூர் நோக்கி சென்ற அவர்கள், அதிவேகமாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

அரசு அதிகாரிகள் வாகனங்களை மறிக்கும் வகையிலும் செயல்பட்டனர். போலீசார் எச்சரித்தும் கண்டுகொள்ளவில்லை. போலீசார் விரட்டி, தச்சநல்லூர் அருகே வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அதில், ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில், போலீஸ்காரர் ஒருவர், டூ – வீலர் ஓட்டிய நபரை தாக்கி வாகன சாவியைப் பறித்தார்.

இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், இரு இளைஞர்கள் மீதும், தச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிந்தனர்.

Source link