புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து

புதுடில்லி: டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்து பேசினார்.

இந்தியாவுக்கு 5 நாள் பயணமாக வந்த சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி, கடந்த பிப்ரவரி 5ம் தேதி சென்னை வந்தார். தொடர்ந்து, சென்னை மற்றும் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், நேற்று டில்லி வந்தடைந்தார்.

இன்று காலை மகாத்மா காந்தி நினைவிடத்தில் இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியாவின் மகாசாகர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருவதற்காக சீஷெல்ஸ் அதிபர் ஹெர்மினிக்கு பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று டில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியை சீஷெல்ஸ் அதிபர் பேட்ரிக் ஹெர்மினி சந்தித்தார். அப்போது, சர்வதேச பிரச்னைகள், இருநாட்டு உறவுகள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்; சீஷெல்ஸ் ஒரு முக்கியமான கடல்சார் அண்டை நாடு. இந்தியாவின் மகாசாகர் தொலைநோக்குத் திட்டத்தின் முக்கிய ஆதரவு நாடாகவும் திகழ்கிறது. தெற்கு பிராந்திய நாடுகளுடனான இந்தியாவின் ஒத்துழைப்பை வெளிக்காட்டுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link