கலிபோர்னியா:சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த

கலிபோர்னியா:சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

உலக புகழ்பெற்ற, சானிடரி பொருட்களை தயாரிக்கும் ‘கிம்பர்லி – கிளார்க்’ நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஒண்டாரியோ பகுதியில் உள்ளது.

இங்கு பணிபுரிந்து வந்த சமெல் அப்துல் கரிம், 29, என்ற இளைஞர் சம்பள உயர்வு கிடைக்காதது, மோசமான பணிச்சூழல் காரணமாக சேமிப்பு கிடங்குக்கு தீ வைத்தார். மளமளவென பற்றிய தீ சேமிப்பு கிடங்கு முழுதும் பரவியது. 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை கட்டுப்படுத்துவது கடினமாக இருந்தது. தீயில் 1,300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுமையாக எரிந்து சாம்பலாயின.

தீ விபத்திற்குள்ளான பகுதியில் பணியில் இருந்த பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனவும் மீட்பு படையினர் தெரிவித்தனர். தீ விபத்துக்கு காரணமான சமெல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Source link