நடப்பாண்டின் காரிப் பருவ பயிர் சாகுபடிக்கு, கடந்த ஆண்டைவிட 12 சதவீதம் கூடுதலாக உர மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், வரும் நாட்களில் உர நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதகமான செய்தி இத்துறை பங்குகளில் எதிரொலித்துள்ளது.
