சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், 'ஆர்டர்லி' முறை இருக்கக்கூடாது என உத்தரவிட்டும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம், ‘ஆர்டர்லி’ முறை இருக்கக்கூடாது என உத்தரவிட்டும், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் வீடுகளில், ஆர்டர்லிகளாக போலீசார் உள்ளனர்; அவர்கள், துாங்குவதற்கு கூட வசதியின்றி அவதிப் படுகின்றனர்.

ஐ.பி.எஸ்., அதிகாரி களின் வீடுகளில் சமையல், குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் ஆர்டர்லி போலீசார் ஈடு படுத்தப்படுகின்றனர்.

ஆனால், தமிழக காவல் துறையில், ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிமன்றம், ‘ஆர்டர்லி முறை என்பது காலனித்துவ அடிமை முறை. இதை முழுமையாக ஒழிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

எனினும், ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி போலீசார் பணிபுரிவது நீடித்து வருகிறது.

இது குறித்து, போலீசார் கூறியதாவது:

சென்னை விருகம்பாக்கத்தில், 19 மாடியில் ‘தாய்ஷா’ எனும் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தற்போது பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு, ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில், குறைந்தபட்சம் ஆர்டர்லி போலீசார் ஐந்து பேராவது உள்ளனர். அவர்களுக்கு துாங்குவதற்கு எந்த வசதியும் கிடையாது; கார் நிறுத்துமிடம் மற்றும் மாடிப்படிகளுக்கு கீழ், தரையில் தங்கி இருக்கின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Source link