வெளிநாட்டு பரிவர்த்தனைகளை விரைவாக வரவு வைக்க வேண்டும் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., சுற்றறிக்கை

மும்பை, நம் நாட்டில் உள்ள வங்கி கணக்குகளுக்கு வரும் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகளை வரவு வைப்பதை விரைவுபடுத்துமாறு வங்கிகளை ஆர்.பி.ஐ., கேட்டு கொண்டுள்ளது.

வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

வெளிநாட்டு பண பரிவர்த்தனை வாயிலாக வங்கி கணக்குக்கு பணம் வந்தால் உடனடியாக பயனாளிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். உரிய நேரத்துக்குள் பணம் பயனாளியின் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும். ஒருவேளை ‘போரக்ஸ்’ மார்க்கெட் நேரங்களில் பண பரிவர்த்தனை நடந்தால், மறுநாள் தெரிவிக்கலாம். வங்கிகள் தங்களின் ‘நோஸ்ட்ரோ’ கணக்குகளின் சரிசெய்தலை அதிகபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும்.

வெளிநாட்டு பங்கு சந்தை செயல்படும் நேரத்திற்குள், அதே வேலைநாளிலேயே பணத்தை பயனாளியின் கணக்கில் வரவு வைக்க முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link