ஒட்டன்சத்திரத்தில் 60 பவுன் தங்கம் 6 கிலோ வெள்ளி கொள்ளை

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டில் 60 பவுன் தங்கம், 6 கிலோ வெள்ளியை கொள்ளையடித்த நால்வரை போலீசார் தேடுகின்றனர்.

ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டன் நகரை சேர்ந்தவர் காளிமுத்து 65. மின்வாரிய ஓய்வு ஊழியர்.

இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் திருச்செந்துார் சென்றார். நள்ளிரவில் இவரது வீட்டிற்கு இரு டூவீலர்களில் வந்த 4 பேர், பூட்டை உடைத்து 60 பவுன் தங்க நகை, 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.45 ஆயிரத்தை கொள்ளையடித்தனர். வாசலில் இருந்த காரையும் திருடிச்சென்றனர்.

திண்டுக்கல் எஸ்.பி., பிரதீப் நேரில் விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை சேகரித்தனர். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ் சி.சி.டி.வி., காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Source link