சென்னை: தெற்கு ரயில்வேயின், புதிய முதன்மை தலைமை பணியாளர் அதிகாரியாக, மோகன்ராஜா நேற்று பொறுப்பேற்றார்.

சென்னை: தெற்கு ரயில்வேயின், புதிய முதன்மை தலைமை பணியாளர் அதிகாரியாக, மோகன்ராஜா நேற்று பொறுப்பேற்றார்.

திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில், உலோகவியல் பொறியியல் பட்டம் பெற்ற மோகன்ராஜா, 1990ம் ஆண்டு ஐ.ஆர்.பி.எஸ்., அதிகாரியாக ரயில்வே பணியில் சேர்ந்தார். பல ஆண்டுகளாக, ரயில்வேயின் பல்வேறு பிரிவுகளில், முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். ரயில்வே ஆள்சேர்ப்பு பிரிவு தலைவராக பணியாற்றி உள்ளார்.

இவரது பணிகளை பாராட்டி, ரயில்வே அமைச்சகம் சார்பில் சிறந்த சேவைக்கான ‘தேசிய விருது’ வழங்கப்பட்டுள்ளது.

நேற்று, தெற்கு ரயில்வேயின் புதிய முதன்மை தலைமை பணியாளர் அதிகாரியாக, பொறுப்பேற்றுக் கொண்டார்.

Source link