இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து: பில்லி ஜீன் கிங் டென்னிசில்

புதுடில்லி: பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்திய அணி 3-0 என, நியூசிலாந்தை வீழ்த்தியது.

டில்லியில், பெண்கள் அணிகளுக்கான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் ‘ஆசிய-ஓசியானியா குரூப்-1’ பிரிவு போட்டிகள் நடக்கின்றன. இதில் இந்தியா, நியூசிலாந்து, இந்தோனேஷியா, தென் கொரியா, மங்கோலியா, தாய்லாந்து என, 6 அணிகள் பங்கேற்கின்றன.

இந்திய அணி, தனது முதல் போட்டியில் 1-2 என தாய்லாந்திடம் தோல்வியடைந்தது.

இரண்டாவது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதன் ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர், நியூசிலாந்தின் ஐஷி தாஸ் மோதினர். இதில் வைஷ்ணவி 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சஹாஜா 6-1, 6-3 என நியூசிலாந்தின் வாலென்டினா இவானோவை தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ருதுஜா ஜோடி 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் நியூசிலாந்தின் எரின், மோனிக் பாரி ஜோடியை வீழ்த்தியது. முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முதல் வெற்றி பெற்றது.

Source link