புதுடில்லி,டில்லி கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியான காலித் சைபிக்கு, ஆறு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி,

புதுடில்லி,டில்லி கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியான காலித் சைபிக்கு, ஆறு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி, கோர்ட் உத்தரவிட்டது.

டில்லியின் வட கிழக்கு பகுதியில் பிப்ரவரி, 24, 2020ல் நடந்த மதக் கலவரத்தின் போது, 53 பேர் கொல்லப்பட்டனர்; 700 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த கலவர வழக்கில் முக்கிய குற்றவாளியாக தண்டனை அனுபவித்து வருபவர், காலித் சைபி.

இவரின் நெருங்கிய உறவினர்களுக்கு திருமணம் நடப்பதால், இரண்டு வாரங்கள் ஜாமினில் விடுமாறு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சமீர் பாஜ்பாய், காலித் சைபிக்கு, ஆறு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

திருமணங்களுக்கு மட்டும் பங்கேற்றால் போதும்; பிற நிகழ்ச்சிகளுக்கு அவர் பங்கேற்க தேவையில்லை என நீதிபதி தன் உத்தரவில் தெளிவுபடுத்தினார்.

Source link