ஜீரோதா ' காயின்' செயலியில் பிக்சட் டிபாசிட் வசதி

நாட்டின் முன்னணி பங்கு தரகு நிறுவனமான ‘ஜீரோதா’, தனது முதலீட்டு தளமான ‘காயின்’ செயலி வாயிலாக, வாடிக்கையாளர்கள் பிக்சட் டிபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் வாயிலாக, பல்வேறு வங்கிகள் வழங்கும் பிக்சட் டிபாசிட் திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டு பார்த்து முதலீடு செய்யலாம்.

வட்டி விகிதங்களை ஒப்பிடுவது, டிபாசிட் செய்வது மற்றும் முதிர்வு காலத்தை கண்காணிப்பது என அனைத்தும் முழுமையான டிஜிட்டல் முறையில் நடைபெறும்.

பங்குகள் மற்றும் மியூச்சுவல் பண்டுகளை போலவே, இனி பிக்சட் டிபாசிட்களையும் ‘காயின்’ செயலி வாயிலாக நிர்வகிக்க முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Source link