வீடு வீடாகச் சென்று பூத் ஸ்லிப் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி, தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணி இன்று தொடங்குகிறது.
இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 5,73,43,291 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை (2,93,04,905), ஆண்களை (2,80,30,658) விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று வாக்காளர் சீட்டு (Booth Slip) வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. இதனை வரும் 17-ம் தேதிக்குள் முடிக்குமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்
சென்னையில் 419 வேட்பாளர்கள் போட்டி
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 419 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்;
இதில் அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 47 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக சைதாப்பேட்டை தொகுதியில் 15 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
-
Apr 10, 2026 07:36 IST
காரைக்குடியில் விஜய் இன்று பரப்புரை
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்; இதற்காக காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபம் அருகே பaகல் 12 மணி முதல் 2.30 மணி வரை அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காரைக்குடி தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு X பதிவு
காரைக்குடியில் நம் தலைவர் ❤️
மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் தலைவர் தளபதி நமது காரைக்குடிக்கு வருகிறார்கள். இன்று ஏப்ரல் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்கள். அன்புக்குரிய அண்ணன் பொதுச்செயலாளர் என். ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்…
— Dr.Tk.Prabhu (@drtkprabhu_TVK) April 10, 2026
-
Apr 10, 2026 07:33 IST
அன்புமணி ராமதாஸ் இன்று முதல் தீவிர பிரச்சாரம்
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (ஏப்ரல் 10) முதல் இரண்டு நாட்களுக்குத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
அவரது பயணத் திட்டம் பின்வருமாறு:
இன்று (ஏப். 10): கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் தனது பிரசாரத்தைத் தொடங்குகிறார். தொடர்ந்து பகண்டை கூட்டுச்சாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். பின்னர் திருக்கோவிலூர், விழுப்புரம் நகரப் பகுதிகளில் வாக்குச் சேகரித்துவிட்டு, விக்கிரவாண்டியில் இன்றைய பயணத்தை நிறைவு செய்கிறார்.
நாளை (ஏப். 11): செஞ்சி தொகுதியில் தொடங்கி மேல்மலையனூர், செஞ்சி மற்றும் மயிலம் தொகுதியின் நாட்டூர்மங்கலம் ஆகிய பகுதிகளில் மக்களைச் சந்திக்கிறார். இறுதியாக, அனனியூர் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டக் கூட்டத்தில் உரையாற்றித் தனது இரண்டு நாள் பயணத்தை முடிக்கிறார்.
அன்புமணியின் வருகையை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாமக மற்றும் கூட்டணிக் கட்சியினர் உற்சாகமான வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
-
Apr 10, 2026 07:33 IST
திரிபுராவை விஞ்சிய புதுச்சேரி: தேசிய அளவில் வரலாற்றுச் சாதனை வாக்குப்பதிவு
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் மிக உயர்ந்த அளவாக 89.83 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக திரிபுரா மாநிலத்தில் பதிவான 88 சதவீதமே நாட்டின் அதிகபட்ச பதிவாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை புதுச்சேரி முறியடித்துள்ளது.
