பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்துவருகிறார். அந்தவகையில், இன்றும், நாளையும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பா.ம.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள மணலூர்பேட்டை, பகண்டை கூட்டுசாலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்றும், செஞ்சி தொகுதியில் உள்ள மேல்மலையனூர், செஞ்சி, மயிலம் தொகுதியில் உள்ள நாட்டார்மங்கலம், விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள அன்னியூரில் நாளையும் பிரசாரம் செய்ய உள்ளார்.
மேற்கண்ட தகவல் அன்புமணி ராமதாசை தலைவராக கொண்டு செயல்படும் பா.ம.க. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
