புதுடில்லி: ராஜ்யசபா துணைத்தலைவராக பதவி வகித்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, நியமன எம்.பி., பதவி வழங்கி

புதுடில்லி: ராஜ்யசபா துணைத்தலைவராக பதவி வகித்த ஹரிவன்ஷ் நாராயண் சிங்குக்கு, நியமன எம்.பி., பதவி வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார்.

ராஜ்யசபாவின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் பதவி வகித்தார். இவர் 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 11ம் தேதி முதல் இந்தப் பதவியில் நீடித்தார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இவர், பீஹார் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இவரது பதவி காலம் நேற்று ஏப்ரல் 9ம் தேதி நிறைவடைந்தது. அவருக்கு மீண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாகும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஹரிவன்ஷ்க்கு, நியமன எம்.பி., பதவி வழங்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டார். மீண்டும் ராஜ்யசபாவுக்கு ஹரிவன்ஷ் வருவது உறுதியாகியுள்ளதால், அவரே மீண்டும் துணைத்தலைவராக பதவி ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source link