`சாபக்கேடு’ என விமர்சித்த பாகிஸ்தான்; ‘அழிவுக்கு அழைப்பு விடுப்பதற்குச் சமம்’- எச்சரிக்கும் இஸ்ரேல்!

“லெபனானிலும் தனது இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு” என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் கண்டனம் தெரிவித்திருந்தார். தற்போது இஸ்ரேல் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது.

இஸ்ரேல் குறித்துப் பேசியிருந்த பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா, “இனப்படுகொலையை அரங்கேற்றும் தீய சக்தியான இஸ்ரேல், மனித குலத்திற்கே ஒரு சாபக்கேடு.

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்

பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்

இஸ்லாமாபாத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும்போது, ​​லெபனானில் இனப்படுகொலை செய்யப்படுகிறது.

அப்பாவி குடிமக்கள் இஸ்ரேலால் கொல்லப்படுகிறார்கள், முதலில் காசாவிலும், பின்னர் ஈரானிலும், இப்போது லெபனானிலும் ரத்த ஆறு ஓயாமல் தொடர்கிறது.

ஐரோப்பிய யூதர்களை ஒழிப்பதற்காக பாலஸ்தீனிய மண்ணில் புற்றுநோய் போன்ற அரசை உருவாக்கியவர்கள் நரகத்தில் எரிய வேண்டும் என்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என்று இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

Source link