கன்னியாகுமரியில் நாளை மறுநாள் தவெக தலைவர் விஜய் பிரசாரம்

தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.

விஜய்யின் அரசியல் வருகை காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை ஒட்டி மற்ற கட்சி தலைவர்களை போன்றே த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

த.வெக. தலைவர் விஜய் இன்று மதியம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

இந்நிலையில் கன்னியாகுமரியில் விஜய் நாளை மறுநாள் பிரசாரத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். அங்கு அமைக்கப்பட உள்ள பிரமாண்டமான பொதுக்கூட்ட மேடையில் 6 தொகுதிகளின் த.வெ.க. வேட்பாளர்களையும் ஆதரித்து நடிகர் விஜய் பிரசாரம் செய்து விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Source link