கோவை: தொழில்துறை விவகாரங்களில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதுவிதமாக சிந்திக்கிறது என கோவையில் தொழில்துறையினரிடம் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பீயூஷ் கோயல் பேசுகையில் தெரிவித்தார்.
கோவையில் நடந்த தொழில்துறை மற்றும் வர்த்தக துறையினருடன் கலந்துரையாடலில் பீயூஷ் கோயல் பேசியதாவது: மிக்க நன்றி, வணக்கம். பிரதமர் மோடி அடிக்கடி கோவையை, தென்னிந்தியாவின் தொழில் முனைவோர் வலிமையின் ஆற்றல் மையம் என்று குறிப்பிடுவார். நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்று கோவை. நான் கோவைக்கு வரும் போது இங்கே காணப்படும் பல்வேறு வகையான தொழில்கள், அவை பொறியியல், ஜவுளி, பாதுகாப்பு துறை அல்லது விண்வெளித்துறை சார்ந்தவையாக இருக்கலாம்.
யோசனைகள்
அதேபோல் புதுமையான யோசனைகளுடன் வரும் நமது இளம் ஸ்டார்ட்அப்கள். இன்று நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மையங்களில் இதுவும் ஒன்று. புதிய யோசனைகளுடன் துணிச்சலான முடிவுகளை எடுக்கும் ஆர்வம், சவால்களை எதிர்கொள்ளும் துணிச்சல் மற்றும் ஆகியவற்றை இங்கே காண முடிகிறது.
இங்கு 15 லட்சம் சிறு குறு நிறுவனங்கள் உள்ளன. அதனால் தான் கொள்கை முடிவுகள் எடுப்பதற்கும், நாட்டிற்கு எது நல்லது என்பதற்கும், நாங்கள் உங்களது ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
ஏப்.,23ல்!
மேலும் நான் ஜவுளித்துறையில் கொள்கை ரீதியான ஆலோசனைகள் தேவைப்படும் போதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான மையங்களில் ஒன்றாக திகழ்ந்தது உங்கள் அண்டை ஊரான திருப்பூர் தான்.
உலக அரங்கில் இந்தியாவை முன்னோக்கி நகர்த்தும் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும். தொழில்துறை விவகாரங்களில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு புதுவிதமாக சிந்திக்கிறது. முறையான நிர்வாகம் செய்பவர்களுக்கு ஏப்ரல் 23ல் ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு பீயூஷ் கோயல் பேசினார்.
