Kanimozhi Somu About Edappadi Palanisamy,எடப்பாடி பழனிசாமிக்கு மூன்றாவது இடத்திற்கு போய்விடுவோமோ என்ற பயம்..மன அழுத்தத்தில் பேசிக்கொண்டு இருக்கின்றார் : கனிமொழி சோமு – dmk kanimozhi somu criticise edappadi palanisamy speech

எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் குறித்தும் துணை முதல்வர் குறித்தும் அவதூறு பரப்பி பேசிக்கொண்டு இருக்கின்றார், தரம் தாழ்ந்து பேசிக்கொண்டு இருக்கின்றார் என திமுக தரப்பு குற்றம்சாட்டி வருகின்றனர். தனது பரப்புரையில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதைபோல் அவர்களும் தங்களது பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்து தான் வருகின்றனர்.

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தனது விமர்சனத்தில் பால்டாயில், கொரோனாவிலேயே போயிருப்பார் என்பது போன்ற வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சிற்கு கடும் கண்டனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் திமுகவின் கனிமொழி சோமு எடப்பாடி பழனிசாமிக்கு தனது கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றார். மேலும் மன அழுத்தத்தால் தான் எடப்பாடி பழனிச்சாமி இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றார்.

அவர் தனது மனநிலையை முதலில் பரிசோதித்து பார்க்க வேண்டும் என கூறியுள்ளார் கனிமொழி சோமு. மேலும் அவர் கூறியது, ஒரு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிஇப்படி பேசியிருந்தால் ஏதோ தெரியாமல் பேசிவிட்டார் என சொல்லலாம். ஆனால் கூட்டத்திற்கு கூட்டம் இதைப்போல தான் தொடர்ந்து பேசி வருகின்றார் எடப்பாடி பழனிச்சாமி. துணை முதலமைச்சரை தொடர்ந்து அவர் விமர்சித்து வருவதால் தான் அதே பெயரை நாங்கள் அவருக்கு திருப்பி கொடுத்துவிட்டோம்.

அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் அவருக்கு திருப்பி கிடைக்கும். பரப்புரையில் அரசியல் குறித்து பேச வேண்டும். மக்களுக்கு என்ன செய்யப்போகின்றோம் ? தங்களது ஆட்சியில் என்னென்ன நல்ல விஷயங்கள் செய்தோம் என்பதை கூறி தான் பரப்புரை செய்ய வேண்டும். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அப்படியெல்லாம் பேசவில்லை. ஏனென்றால் அவர்களின் ஆட்சியில் குற்றங்கள் தான் நடந்ததே தவிர நல்ல விஷயங்கள் எதையும் அவர்கள் செய்யவில்லை.

அதனால் தான் அதைப்பற்றி பேசாமல் இப்படி தரம் தாழ்ந்து விமர்சித்து வருகின்றனர். அவர்க்ளின் ஆட்சி காலத்தில் மத்தியில் இருந்து பாஜகஅதிமுகவை செயல்படுத்தி வந்தனர். எனவே தான் முதலமைச்சர் இந்த தேர்தல் தமிழகத்திற்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் போர். இதில் தமிழகம் வென்றே தீர வேண்டும் என சொல்கின்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி எங்கே மூன்றாவதாக போய்விடுவோமோ என்ற பயத்தில் இருக்கின்றார்.

இரண்டாவது இடம் கூட அவருக்கு கிடைக்காது என எடப்பாடி பழனிச்சாமி பயப்படுகிறார். அந்த பயத்தினால் தான் மன அழுத்தத்தில் இப்படியெல்லாம் பேசிக்கொண்டு இருக்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி. முதலில் அவரின் மனநிலையை பரிசோதித்து பார்க்க வேண்டும் என கடுமையாக சாடியுள்ளார் கனிமொழி சோமு.

மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சுக்கு எல்லாம் தேர்தல் மூலமாக தமிழ்நாட்டு பெண்கள் பதிலடி தருவார்கள் என்றும் பேசியிருக்கிறார் கனிமொழி சோமு. இந்நிலையில் ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி பேசியது சர்ச்சையாகி எங்கே அவரின் பேச்சு கட்சிக்கு பின்னடைவை கொடுத்துவிடுமோ ? என்ற விவாதங்கள் போய்க்கொண்டு இருக்கின்றன. எடப்பாடி பழனிச்சாமியின் சர்ச்சை பேச்சிற்கு பிறகு பலரும், முக ஸ்டாலின் ஒருபோதும் இதுபோல பேசியது கிடையாதே ? என அவரை புகழ்ந்து பாராட்ட துவங்கியிருக்கின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் முக ஸ்டாலின் மீதான மரியாதை மக்களிடம் மேலும் அதிகரித்ததாகவே பலர் சொல்கின்றனர். எனவே எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை பேச்சு திமுகவிற்கு சாதகமாக அமையலாம் என கணிக்கப்படுகின்றது. அதே சமயம் எடப்பாடி பழனிச்சாமி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படுவார் என்பது போல பேசியிருக்கிறார் கனிமொழி சோமு.

அப்படியென்றால் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு தவெக கட்சிக்கு பலம் சேர்ப்பதாக பொருள் அமைகின்றது. ஏற்கனவே தவெக மற்றும் திமுக இடையே தான் போட்டி என தவெக கட்சியை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். அதிமுக ஒரு பொருட்டே இல்லை என்று தான் சொல்கின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி எங்கே தான் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுவிடுவோமோ என்ற பயத்தில் பேசிக்கொண்டு இருப்பதாக திமுகவின் கனிமொழி சோமு சொல்கின்றார்.

டெல்லி பிக் பாஸுக்கு ஆமா போடும் எடப்பாடி பழனிசாமி- முதல்வர் முரட்டு அட்டாக்

அப்படியென்றால் திமுக தரப்பும் தவெக தங்களுக்கு போட்டியாக இருப்பார்கள் என கருதுகிறீர்களா ? அதிமுகவை விட தவெக சவால் கொடுப்பார்கள் என திமுகவினர் நினைக்கின்றார்களா? அதனால் தான் கனிமொழி சோமு இப்படி ஒரு கருத்தை பதிவு செய்துள்ளாரா ?என்பது போன்ற பல கேள்விகள் உலா வருவதும் குறிப்பிடத்தக்கது.

Source link