போடி தொகுதியில் சிறப்பாக செயல்படும் ஒன்றிய செயலாளருக்கு பரிசளிக்கப்படும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
போடி தொகுதியில் சிறப்பாக செயல்பட்டு அதிக வாக்குகள் பெற்றுத் தரும் திமுக ஒன்றியச் செயலாளருக்கு 5 பவுனில் தங்க பதக்கம் பரிசாக வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
அதேபோல் போடியில் அதிக ஓட்டு வாங்கும் பூத்தின் திமுக முகவர் உள்ளிட்டோருக்கு ரூ. 1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார். அத்துடன் எதிர்க்கட்சி வேட்பாளரை விட அதிக வாக்கு பெறும் பூத்திற்கு தனிப் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
