காரைக்குடி: காரைக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி அளித்த நேரத்துக்கு பிறகு வந்த தவெக

காரைக்குடி: காரைக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்துக்கு போலீஸ் அனுமதி அளித்த நேரத்துக்கு பிறகு வந்த தவெக விஜய், திடீரென காரில் இருந்து சைக்கிள் ஓட்டி சென்றார். அவரை பார்க்க தவெகவினர் குவிந்தனர். பிரசார வாகனத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்திய விஜய், அங்கிருந்து பேசாமல் சென்றார்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி உள்ளிட்ட தொகுதிகளில், த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடைபெறும் கூட்டத்தில், விஜய் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக, சென்னையில் இருந்து தனி விமானத்தில் மதுரை சென்று, அங்கிருந்து சாலை வழியே காரைக்குடிக்கு விஜய் வந்தார். வழியில் திருப்பத்தூர் அருகே அவரது வாகனத்தை நிறுத்தி தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

காரைக்குடியில் விஜயின் பிரசாரத்துக்கு, இன்று மதியம் 12:00 மணி முதல் 2:30 மணி வரை, மாவட்ட தேர்தல் அதிகாரி அனுமதி அளித்துள்ளனர். ஆனால், பிரசார இடத்திற்கு 2: 30 மணிக்கு மேல் தான் விஜய் வந்தார். ஆனால் அவரை பார்க்க காலை முதலே கூடியிருந்த தவெகவினர் காத்திருந்தனர். இதன் இடையே வரும் வழியில், திடீரென காரில் இருந்து இறங்கிய விஜய், சிறிது தூரத்துக்கு சைக்கிள் ஓட்டிச் சென்றார். இதனால், அவரை சுற்றி தவெகவினர் கூடினர். இதனால் விஜய் தடுமாறினார்.

இதன் பிறகு பிரசார வாகனத்தில் ஏறிய விஜய், வேட்பாளரை தொண்டர்கள் மத்தியில் வேட்பாளரை அறிமுகம் செய்தார். தொடர்ந்து விசில் சின்னம் அடங்கிய பதாகையை காட்டி ஓட்டு சேகரித்தார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி தாமதமாக வந்த விஜய், தொண்டர்கள் மத்தியில் பேசாமல் கிளம்பி சென்றார். ரோடு ஷோவாக மாற்றிய விஜய் ஓட்டு சேகரித்து சென்றார். பேசாமல் சென்றதால் அங்கிருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதன் பின்னர்,அங்கு கூடியிருந்தவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர்.

Source link