புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாருக்கு எதிராக, கரப்பான்பூச்சி கட்சியும், ‘இண்டி’ கூட்டணியும், டில்லியில் தனித்தனியாக போராட்டங்களை நடத்தி வருகின்றன. காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் தலைமையில், ‘இண்டி’ கூட்டணியினர் டில்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கு ஊர்வலமாக சென்றனர். இதில், காங்., மூத்த தலைவரும், கர்நாடக முதல்வருமான சிவகுமாரும் பங்கேற்றார். ஏகப்பட்ட கூட்டம்.
சிவகுமார், ராகுல் அருகே வந்து நிற்க முயற்சித்தார். ஆனால், அவரை ராகுல் ஒரு தள்ளு தள்ளிவிட்டார். நிலைகுலைந்து போன சிவகுமாருக்கு அதிர்ச்சி. அவர் கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை காணவில்லை. 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த கைக்கடிகாரத்தை இவருக்கு பரிசாக அளித்தது, முன்னாள் முதல்வர் சித்தராமையா.
ராகுல் தள்ளியதால் கீழே விழுந்ததா அல்லது யாராவது ஆட்டையை போட்டனரா என, தெரியவில்லை. மேலும், அங்கிருந்த கூட்ட நெரிசலில் கீழே குனிந்து, சிவகுமாரால் தேடவும் முடியவில்லை. ஞானேஷ் குமார் பதவி விலகுகிறாரோ இல்லையோ… கைக்கடிகாரம் தொலைந்து போனதால் வருத்தத்தில் உள்ளாராம் சிவகுமார்.
