BAN vs ZIM ODI – ரன் மழை பொழிந்த ஜிம்பாப்வே அணி: வங்கதேசம் படுதோல்வி: ஸ்கோர் விபரம் – zimbabwe team beat bangladesh team by 99 runs in odi tri series

ஐக்கிய அரபு அமீரகத்தில் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஜிம்பாப்வே இன்னிங்ஸ்: முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில், ஓபனர்கள் சிறப்பாக செயல்பட்டவில்லை. பிரையன் பென்னெட் 0 (6), பென் கரண் 6 (11) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், ஒன்டவுன் பேட்டர் ட்சிகாவும் 16 (16) சொதப்பினார். இதனால், ஜிம்பாப்வே அணி, துவக்கத்தில் 24/3 என படுமோசமாக தடுமாறியது.

பெரிய பார்ட்னர்ஷிப்: இதனைத் தொடர்ந்து, பெரிய பார்ட்னர்ஷிப்பை பிரெண்டன் டெய்லர் மற்றும் க்ரேயக் எர்வின் ஆகியோர் அமைத்தனர். இதில், டெய்லர் 101 பந்தில் 10 பவுண்டரி உட்பட 81 ரன்களை சேர்த்த நிலையில், கிரேயக் எர்வின் 106 பந்தில் 93 ரன்களை எடுத்தார். இப்படி, இருவரும் தொடர்ச்சியாக அபாரமாக விளையாடி ஸ்கோரை கிடுகிடுவென உயர்த்தினார்கள்.

இறுதிக் கட்டத்தில், நியம்குரி 21 (17), மசகட்சா 21 (15) ஆகியோர் சிறப்பாக செயல்பட்டதால், ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 271/8 ரன்களை குவித்து அசத்தியது.

டஸ்கின் அகமது, 10 ஓவர்களில் 44 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். சொரிபுல் இஸ்லாம் 10 ஓவர்களில் 47 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், சைப் ஹஸ்ஸன் 3 ஓவர்களில் 17 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் எடுத்தனர்.

வங்கதேசம் இன்னிங்ஸ்: இலக்கை துரத்திக் களமிறங்கிய வங்கதேச அணியில், ஓபனர் தன்சாத் ஹசன் தமீம் அதிரடியாக விளையாடி, 38 பந்தில் 46 ரன்களை அடித்த நிலையில், அடுத்து எந்த பேட்டரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சுமையா சர்கார் 9 (17), ஷான்டோ 4 (8) ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆன நிலையில், சைப் ஹஸ்ஸன் 26 (37), கேப்டன் டௌகித் கிரிடோய் 13 (21), மொசடேக் ஹோஸ்ஸைன் 11 (18), நூருல் ஹசன் 5 (8) என முக்கிய பேட்டர்கள் தொடர்ச்சியாக சொதப்பினார்கள்.

இறுதியில், வங்கதேச அணி, 33.4 ஓவர்களில் 172/10 ரன்களை மட்டும் எடுத்து 99 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

பிராட் எவன்ஸ் 6.4 ஓவர்களில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை எடுத்தார். மேலும், சிக்கந்தர் ராசா 7 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும், மசகட்சா 6 ஓவர்களில் 18 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களையும் கைப்பற்றி அசத்தினார்கள்.

வங்கதேச அணி, சமீபத்தில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியை வென்றதால், அந்த அணி மீது தற்போது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தாங்கள் இனி கத்துக்குட்டி அணி இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், இந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக சொதப்பி, பெரிய ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, 2ஆவது போட்டி, அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகள் மோதும்.

Source link