சென்னையில் நள்ளிரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை – தேசிய பேரிடர் மீட்பு குழு அனுப்பி வைப்பு!

வட கிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் நேற்று முன் தினம் முதல் மழை பெய்யத் தொடங்கியது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டுள்ளது. ராயபுரம், வண்ணாரப்பேட்டை, எண்ணூர் மற்றும் வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.