யுவராஜ் சிங் கையெழுத்திட்ட ஜெர்சியை குப்பைத் தொட்டியில் வீசிய பிராட்!

2007 டி20 உலகக் கோப்பையை தோனி தன் கேப்டன்சி அறிமுகத் தொடரிலேயே வென்றது ஒருபுறம் இந்திய ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது என்றால், இன்னொரு புறம் யுவராஜ் சிங், இங்கிலாந்து ஸ்விங் பவுலர் ஸ்டூவர்ட் பிராடை 6 சிக்சர்கள் ஒரே ஓவரில் விளாசியது இன்று மாக்கதையாடல் ஆகி அனைவரது கற்பனையிலும் பல விதங்களில் ஊறித்திளைத்துள்ளது.

ஆனால், யுவராஜ் சிங்குக்கு அது ஒரு மலரும் நினைவுகள், மாறாக பிராடுக்கு? அது மறக்கப்பட வேண்டிய துர்சொப்பனம். ஏனெனில் பிராட் கண்ணை மூடும்போதெல்லாம் யுவராஜ் அடித்த 6 சிக்சர்கள் கண் முன்னால் வந்து போகத்தானே செய்யும்? இது எந்த ஒரு பவுலருக்கும் உண்மையில் பெரிய சித்ரவதையே.

Source link