டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டு

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதற்கு பதிலடியாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அமெரிக்கா- ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்காவும், ஈரானும் தாக்குதலை நிறுத்திவிட்டன. இன்று அமெரிக்காவில் நிரந்தர போர் நிறுத்தத்திற்காக பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

இதற்கிடையே நேற்றிரவு ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்கள் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் இறையாண்மை மற்றும் வான்பகுதியை மீறுவதாகும். இது கண்டனத்திற்குரியது என குவைத் தெரிவித்துள்ளது. அதேவேளையில் குவைத் குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையிலான இடைக்கால போர் நிறுத்தத்திற்குப் பிறகு வளைகுடா நாடுகள் மீது எந்தவொரு தாக்குதலையும் நடத்தவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.

Source link