வாஷிங்டன்: நிரந்த தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் இருந்து, மைக்ரோசாப்ட், ஹெச்சிஎல், டிசிஎஸ் போன்ற இந்திய நிறுவனங்களை அமெரிக்கா நீக்கியது. இது, இந்த நிறுவனங்களில் பணியாற்றும் தகுதியான ஊழியர்களின் கிரீன் கார்டு நடைமுறையில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
அமெரிக்காவின் ஹெச்1பி விசா பெற்று பணியாற்றுபவர்களை, ‘வெளிநாட்டு ஒப்பந்த அடிமைகள்’ என்று துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
தனது பேச்சுக்கு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது; எனது மனைவி எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்பது உங்களுக்கு நன்கு தெரியும். மனைவி மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்கள். வெளிநாடுகளில் இருந்து இங்கு வருபவர்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், வேலைவாய்ப்பில் வெளிநாட்டு ஊழியர்களுக்கும், அமெரிக்கர்களுக்கும் சமநிலை இருக்க வேண்டும்.
குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்துவதற்கு, அமெரிக்கர்களை பணிநீக்கம் செய்வதை ஏற்க முடியாது. அதுபோன்ற செயலில் ஈடுபடும் நிறுவனங்களை குறிப்பிட்டு தான் நான் அப்படி பேசினேன். அமெரிக்கா தனது குடிமக்களின் நலன்களையும், வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பையும் சமநிலை வைக்க கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
