காற்றில் கலந்த தேனிசைத் தென்றல்; அரசு மரியாதையுடன் தேவாவின் உடல் நல்லடக்கம்!

பிரபல இசையமைப்பாளர் தேவா (76) நேற்று (17-10-26) 76) மாரடைப்பு காரணமாக காலமானார். தமிழ் சினிமாவில் கானா பாடலை அறிமுகப்படுத்தி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய இவரின் மறைவு சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. தேவாவின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு முதல்வர் விஜய் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். இவர்களைத் தவிர்த்து ஏராளமான ரசிகர்களும் பொது மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவரது உடல் அவரது சொந்த ஊரான ஆற்காடு அருகே உள்ள சக்கரமநல்லூர் கிராமத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அப்போது வழிநெடுக பொதுமக்கள் கண்ணீர் மல்க தேவாவுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்பு அந்த கிராமத்திற்கு சென்ற பிறகும் அஞ்சலிக்காக சிறிது நேரம் வைக்கப்பட்டிருந்தது. அதில் அந்த கிராம மக்களே பெரும் சோகத்தோடு அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தேவாவுக்கு சொந்தமான கிருஷ்ணவேனி தோட்டத்திற்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

அங்கு தேவாவின் உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அவரின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட்டு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.