வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள்; முதல்வர் விஜய் ஆய்வு!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை மற்றும் அதி கனமழை பெய்தது. இந்த மழை நள்ளிரவு முழுவதும் நீடித்து சென்னையைப் புரட்டி போட்டது. வட சென்னையில் மட்டும் 5 இடங்களில் 21 செ.மீ. மேல் மழைப் பதிவாகியது. அதிகபட்சமாகப் பாரி முனையில் 35 செ.மீ. பதிவாகியது. 

இதனால் சாலையில் வெள்ளம், கடும் போக்குவரத்து நெரிசல், மழை நீருடன் கழிவுநீர் கலப்பு என ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகியது. இதனால் மழையை எதிர்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு குழு சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. பின்பு பாதிப்பு குறித்து புகார் அளிக்க  மண்டல வாரியாக எண்கள் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமடைந்து வருகிறது. 

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்து இன்று (18-10-26) முதல்வர் விஜய் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு வந்து ஆய்வு செய்தார். அங்கு அதிகாரிகளுடன் உரையாற்றிய முதல்வர் விஜய், வடகிழக்கு பருவமழை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் தேங்கும் பகுதிகளை கணக்கிட்டு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து அவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வின் போது முதல்வர் விஜயுடன் அமைச்சர்கள் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்டோர், அதிகாரிகள் உடனிருந்தனர்.