இதனைத் தொடர்ந்து வரும் முதல் பாதி, ‘ஹாங்’ ஆகி நம் பொறுமையையும் சோதிக்கிறது. எமோஷனல் காட்சிகளை ஒட்டியே காமெடிகளையும் சேர்த்திருப்பது, அந்த எமோஷன்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை ‘ப்ளாக்’கில் போட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு வரும் இடைவேளை காட்சி சர்ப்ரைஸை உண்டாக்கி, இரண்டாம் பாதிக்கான எதிர்பார்ப்பையும் கூட்டுகிறது. இரண்டாம் பாதியில், ‘எல்.ஐ.கே’ செயலிக்கு முடிவு கட்ட வைப் வாசே தீட்டும் திட்டங்கள் சாதாரணமானதாக இருந்தாலும், அதனை ரெபரென்ஸ்கள், காமெடிகள் என ‘பி.ஆர்’ ஜோனுக்குள் கதையைத் திருப்பி ரசிக்கும்படியாக மாற்றியிருக்கிறார்கள்.

முதல் பாதியில் வந்த சில விஷயங்களின் தொடர்ச்சியாக இரண்டாம் பாதியில் காட்சிகளை இணைத்திருப்பது, கதாபாத்திரங்கள் அடுத்தடுத்த கட்டத்துக்கு நகரும் இடங்கள் போன்றவை ப்ளஸ்! தொழில்நுட்பம் தனக்குள் உள்ளிடப்படும் தரவுகளை வைத்தே முடிவுகளை எடுக்கிறது, அதற்கு நிஜமான உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாது என்ற மெசேஜை சொன்ன விதமும் அப்ளாஸ்!
