சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வழிபாட்டு நேரம், நவராத்திரி 2026 ஒன்பதாம் நாள் பிரசாதம் பூஜை முறை

நவராத்திரி 9ம் நாள் :

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் என்பது சரஸ்வதி தேவியை வழிபட வேண்டிய நிறைவு நாளாகும். இதை நாம் சரஸ்வதி பூஜையாக கொண்டாடுகிறோம். நவராத்திரியின் நிறைவான ஒன்பதாம் நாள் வழிபாடு மற்றும் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவற்றை செய்ய வேண்டிய நாளாகும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை இவை இரண்டும் ஒன்றா அல்லது வேறு வேறா என்பதில் பலருக்கும் சந்தேகம் உண்டு.

சரஸ்வதி பூஜை – வீட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் படிப்பிற்காக, வேலை தொடர்பாக பயன்படுத்தும் பொருட்களை வைத்து, ஞானத்தை அருள வேண்டும் என சரஸ்வதி தேவியை வழிபடுவது சரஸ்வதி பூஜையாகும்.

ஆயுத பூஜை – கடைகள், அலுவலகங்கள் மற்றும் தொழில் செய்யும் இடங்களில் தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள் போன்றவற்றிற்கு பூஜை போட்டு வழிபடுவது ஆயுத பூஜை ஆகும்.

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 சிறப்புகள் :

இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை ஆகியவை பெருமாளுக்குரிய மிக முக்கியமான விரத மற்றும் வழிபாட்டு நாளான திருவோணம் நட்சத்திரம் அன்று அமைந்துள்ளது. மகா நவமி திதி, திங்கட்கிழமை மற்றும் திருவோணம் நட்சத்திரம் இணைந்து வரும் நாளில் கொண்டாடப்படும் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக உன்னதமான, அரிய சிறப்புகளைக் கொண்டதாகும். நவராத்திரியின் 9-வது நாளான இந்த நன்னாளில், இத்தகைய சிறப்பான யோகம் அமைவது வழிபாட்டிற்குரிய பெரும் பலன்களை வாரி வழங்கக்கூடியதாகும்.

திருவோணம் நட்சத்திரம் – திருவோணம் என்பது மகாவிஷ்ணுவின் அவதார நட்சத்திரம் மற்றும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்த சுப நட்சத்திரமாகும். • நவராத்திரியின் இறுதி நாளில் மகா விஷ்ணுவிற்குரிய திருவோண நட்சத்திரம் அமைவது, கல்வியுடன் கூடிய அழியாத செல்வத்தையும் (மகாலட்சுமி கடாட்சம்) ஒருசேர அள்ளித் தரும். இந்த நட்சத்திரத்தில் துவங்கப்படும் கல்வி, கலைகள் மற்றும் புதிய தொழில்கள் எக்காலத்திலும் தோல்வியடையாது, பன்மடங்கு வளர்ச்சியடையும் என்பது ஐதீகம்.

திங்கட்கிழமை – கலைமகள் வழிபாட்டிற்கு திங்கட்கிழமை மிகவும் உகந்தது. சந்திரன் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தின் ஆதிக்கம் மன ஒருமுகப்பாட்டையும், கல்வியில் சிறந்த ஞானத்தையும் தேடித்தரும்.நீர் மற்றும் சந்திரன் தொடர்புடைய தொழில்கள், கற்பித்தல் மற்றும் படைப்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த நாளில் செய்யப்படும் ஆயுத பூஜை அமோக லாபத்தை ஈட்டித் தரும். நவராத்திரி 2026 நாள் 9 அக்டோபர் 19 திங்கள் அம்பிகையின் பெயர் பரமேஸ்வரி கோலம் தாமரை வகைக் கோலம் மலர் தாமரை இலை மரிக்கொழுந்து நைவேத்தியம் சர்க்கரைப் பொங்கல் சுண்டல் கொண்டைக்கடலை சுண்டல் பழம் நாவல் பழம் ராகம் வசந்தா நிறம் வெந்தய நிறம்

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 வழிபாட்டு நேரம் :

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை 2026 தேதி அக்டோபர் 19 திங்கள் நவமி திதி துவக்கம் அக்டோபர் 19 காலை 09.04 நவமி திதி நிறைவு அக்டோபர் 20 காலை 10.38 வழிபாட்டு நேரம் அக்டோபர் 19 காலை 09.10 – 10.20;மாலை 04.00 – 05.00;மாலை 06.00 மணிக்கு மேல் நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் அபிராமி அந்தாதி அல்லது சகலகலாவல்லி மாலை பாடி அம்பிகையை பிரார்த்தனை செய்வது மிகவும் சிறப்பானதாகும். சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை செய்பவர்கள் மட்டுமின்றி அன்றைய தினமே குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவங்க வேண்டும் என நினைப்பவர்களும் மேலே குறிப்பிட்டுள்ள காலை நேரத்தை பயன்படுத்தி, தங்கள் குழந்தைகளின் கல்வி, கலை பயிற்சிகளை துவக்கலாம்.

Source link