மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சொந்த தொகுதி; துபாய்க்கு பறந்த உதயநிதி

சொந்த தொகுதி மக்கள் மழையால் தத்தளிக்கும் தருணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி துபாய்க்கு சென்றிருக்கிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களில் சென்னையில் நேற்று ஒரே நாளில் பெய்த மழை மக்களை கடும் அவதிக்குள்ளாக்கி இருக்கிறது. மேகவெடிப்பு போன்று ஒரு மழை பெய்து தள்ள, மாநகரமே ஸ்தம்பித்தது.

பேரிடர் மீட்புக்குழுவினர், மாநகராட்சி பணியாளர்கள் என ஏராளமானோர் இரவு, பகலாக தேங்கிய மழைநீரை அகற்றினர். அதி கனமழைக்கான எச்சரிக்கையும் வெளியாகி இருப்பதால் அதிகாரிகள் தீவிர முன்னேற்பாடுகளில் பிஸியாக இருக்கின்றனர். மழையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியின் சொந்த தொகுதியான திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மக்கள் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில், உதயநிதி திடீரென துபாய்க்கு சென்றுள்ளார். அவரின் பயணத்தை அறிந்த ஏராளமான நிருபர்கள், சென்னை விமான நிலையத்தில் திரண்டனர். அவர்கள் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் உதயநிதி சென்றுவிட்டார்.

உதயநிதியின் பயணத்தை ஆளுங்கட்சியான தவெக கடுமையாக விமர்சித்துள்ளது. மக்களை பார்க்காமல் துபாய்க்கு சென்றுவிட்டதாக எக்ஸ் பதிவை வெளியிட்டு உள்ளது. அவரது பயணத்தை அறிந்த பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பி இருக்கின்றனர்.

Source link