பனாஜி: கோவாவின் மார்கோவில் நடந்த கூட்டத்தில் ஓட்டு திருட்டு குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசினார்.
அவர் பேசியதாவது; தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஓட்டுத் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். என் மீது மொத்தம் 45 மானநஷ்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தொடர்ந்துள்ளனர்.
ஓட்டு திருடப்பட்டதாக நான் தொடர்ந்து கூறுகிறேன். ஆனால், இந்த விஷயத்தில் என் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. ஏன் என்று தெரியுமா? வழக்கு போட்டால், இது நமக்கு எதிராக திரும்பி விடும் என்று அஞ்சுகின்றனர். காங்கிரஸ் இவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய நீதியை பெற்றுத்தரும். நாங்கள் தான் அரசியலமைப்பின் பாதுகாவலார்கள். ஓட்டு திருட்டின் மூலம் அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
கோவாவில் அதிகளவில் ஊழல் நடக்கிறது. இங்குள்ள ஆட்சியாளர்கள், கோவாவை, ஊழலுக்கு முன்மாதிரி மாநிலமாக மாற்றி விட்டனர். இவ்வாறு கூறினார்.
