தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் விலகியதைத் தொடர்ந்து, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாகவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. குறிப்பாக, நேற்று இரவு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
ரஜினி செல்வாக்கு தெரியாம பேசக்கூடாது! எச்சரித்த ரஜினி ஆதரவாளர்
இந்நிலையில், அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் தீவிரமடைந்து பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் சென்னைக்கு அதி கனமழை எச்சரிக்கையான ரெட் அலர்ட் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.பின்னர் ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை விமர்சித்து திமுக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பதிவில் கூறியிருப்பதாவது: நேற்று பெய்த மழைக்கு இன்று மதியம் Red Alert கொடுத்த அற்புதமான ஆட்சி. ஒற்றன் விழாவைச் சிறப்பித்துவிட்டு வருவதற்குள்ளாக, சென்ற #திமுக ஆட்சி செய்த மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகள்தான் சென்னையை இந்த மழையிலும் பெரும் பாதிப்பிலிருந்து காப்பாற்றின என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து ரெட் அலெர்ட் வாபஸ் பெறப்பட்டத்திற்கு தவெக அரசுக்கும் என்ன தொடர்பு என டி.ஆர்.பி.ராஜவை தற்போது நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
