தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை எகிறி வரும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாக்கி உள்ளனர். இதையடுத்து, வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யவும் கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை இணையம், தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் ஆகியவற்றிடமிருந்து வெங்காயம் பெறப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் மூன்று கட்டங்களாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிசந்தையில் இருந்து 7,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்; 3-வது டெண்டரை வெளியிட்ட மின்சார வாரியம்
நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் தங்களது வழக்கமான பணிகளுடன் சேர்த்து வெங்காயத்தை இருப்பு வைத்தல், தரம் பிரித்தல், எடையிட்டு விற்பனை செய்தல் மற்றும் விற்பனை கணக்குகளைப் பராமரித்தல் போன்ற கூடுதல் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். நியாய விலைக் கடை ஊழியர்களின் இந்தப் பணியை ஊக்கப்படுத்தும் விதமாக விற்பனை செய்யப்பட்ட வெங்காயத்தின் அளவின் அடிப்படையில் கிலோவுக்கு ரூ.2 வீதம் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை விற்பனை செய்யப்பட்ட அளவின் அடிப்படையில் மட்டுமே கணக்கிடப்படும். சேதாரம் அடைந்த வெங்காயம் மற்றும் விற்பனையாகாமல் கடைகளில் இருப்பில் உள்ள வெங்காயத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படாது. விற்பனை அளவுகள் மற்றும் பதிவேடுகள் முறையான ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகே ஊக்கத்தொகை கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
