தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்து வருகிறது. குறிப்பாக சனிக்கிழமை (அக்டோபர் 17) இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் தங்கி தேங்கியது. தமிழக அரசின் துரித நடவடிக்கையால் தேங்கியிருந்த மழைநீர் பல்வேறு இடங்களில் அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் விஜய் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையினைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மழைவெள்ளத்தால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
/indian-express-tamil/media/post_attachments/8eebbff3-532.jpg)
/indian-express-tamil/media/post_attachments/155e14cf-014.jpg)
மேலும், அங்கு அதிகாரிகளுடன் உரையாற்றிய முதல்வர் விஜய், வடகிழக்கு பருவமழை குறித்து என்னென்ன முன்னெச்சரிக்கைகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன, மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் தேங்கும் பகுதிகளில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்து ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆய்வின் போது முதல்வர் விஜயுடன் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்ராஜ், வெங்கடரமணன், ராஜ்மோகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/1374d640-43d.jpg)
/indian-express-tamil/media/post_attachments/6b0ce377-760.jpg)
கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த முதல்வர் விஜய், அங்கு சிறப்பாக பணியாற்றி வரும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாக கைதட்டி பாராட்டு தெரிவித்து, உற்சாகப்படுத்தினார்.
/indian-express-tamil/media/post_attachments/e77720a6-7f6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/828ca3ec-1a2.jpg)
பின்னர் ஆய்வு முடிந்து வெளியே வந்த முதல்வர் விஜய், அங்கு சாலையோரம் கூடியிருந்த பொதுமக்களை பார்ப்பதற்காக சிறிது தூரம் நடந்து சென்று அவர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தினார். முதல்வர் விஜய் நடந்து வந்து கையசைத்ததைக் கண்ட பொதுமக்கள் அவருக்கு ஆராவாரமாக வரவேற்பு அளித்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/0dd277fb-0a6.jpg)
/indian-express-tamil/media/post_attachments/a49f79a4-3f2.jpg)
புகைப்படங்கள்: தமிழக முதல்வர் சமூக ஊடகப் பக்கம்
