பிரபல பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தி மொழியில் வெளியான பாகி, வார் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் டைகர் ஷெராஃப். இவர் இன்று (18-10-26) மாலை மும்பையின் ஜுஹூ பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடிவிட்டு வெளியே வந்து தனது காரில் ஏறினார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல், தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து டைகர் ஷெராஃபை நோக்கி சுட்டனர். ஆனால், அந்த குண்டு டைகர் ஷெராஃப் படாமல் அவர் உயிர் தப்பினார். ஆனால் அந்த குண்டு அவரின் கார் ஓட்டுநர் மீது பாய்ந்து காயமடைந்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்த ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ ஒன்றில், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர் என்று தன்னை அனில் பண்டிட் என அடையாளப்படுத்திக் கொண்ட நபர், ‘எங்கள் உத்தரவுகளை அவர் கேட்கவில்லை சல்மான் கானுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அதனால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறியுள்ளார். இது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு, சல்மான் கான் வீட்டில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த இரண்டு நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
