ஈஸ்ட் பெங்கால் கலக்கல்: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

கோவா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரை ‘நடப்பு சாம்பியன்’ ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றியுடன் துவக்கியது. லீக் போட்டியில் 4-0 என, சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வென்றது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று, கோவாவில் நடந்த லீக் போட்டியில் சர்ச்சில் பிரதர்ஸ், ‘நடப்பு சாம்பியன்’ ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு டேனி ரமிரெஸ் (2வது நிமிடம்), எட்மண்ட் லால்ரிண்டிகா (45வது) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முதல் பாதி முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியிலும் அசத்திய ஈஸ்ட் பெங்கால் அணிக்கு 85, 90வது நிமிடத்தில் பிபின் சிங் 2 கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய சர்ச்சில் பிரதர்ஸ் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வடகிழக்கு அணி வெற்றி

அசாமின் கவுகாத்தியில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், கேளரா அணிகள் மோதின. இதில் வடகிழக்கு யுனைடெட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Source link