ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வரும் ராணுவ அதிகாரியின் மனைவி மீது சீனாவுக்கு உளவு பார்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் பெயர் மற்றும் விபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
ராணுவ வீரரின் மனைவி தெலங்கானாவைச் சேர்ந்தவர். ஐநாவில் ஐடி இன்டர்ன்ஷிப் செய்த இவர், ஜெனிவாவில் முதுநிலை படிப்பை படித்துள்ளார்.
2023ல் ராணுவ அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். ராணுவம் தொடர்பான தகவல்களை ஏஐ தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆவணம் தயாரித்து கொடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிகள், அருணாச்சலப் பிரதேச உள்கட்டமைப்புத் திட்டங்கள், டிரோன் பயன்பாடு குறித்த பாதுகாப்பு ரகசியங்களை ஆவணங்களாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜம்முவின் தாவி ரயில் நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது செல்போனை பறிமுதல் செய்து,தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.
