ஓடென்ஸ்: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் ஒற்றையரில் தென் கொரிய வீராங்கனை ஆன் சே-யங் சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்மார்க்கில், ‘சூப்பர் 750’ அந்தஸ்து பெற்ற சர்வதேச பாட்மின்டன் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் ஜப்பானின் அகானே யமாகுச்சி, ‘நடப்பு சாம்பியன்’ தென் கொரியாவின் ஆன் சே-யங் மோதினர். முதல் செட்டை யமாகுச்சி 23-21 என போராடி கைப்பற்றினார். பின் எழுச்சி கண்ட ஆன் சே-யங், 2வது செட்டை 21-14 என தன்வசப்படுத்தி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் மீண்டும் அசத்திய தென் கொரிய வீராங்கனை 21-18 என வென்றார்.
ஒரு மணி நேரம், 19 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஆன் சே-யங் 21-23, 21-14, 21-18 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) சாம்பியன் ஆனார்.
