அதானி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா.. மகாராஷ்டிரா முதல்வர் பட்நாவிஸ்க்கு கெளரவ டாக்டர் பட்டம்!

வார்தா: மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் அதானி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 17வது பட்டமளிப்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல் தேசிய மருத்துவ ஆணைய தலைவர் டாக்டர் அபிஜித் சேத்துக்கும் டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

மருத்துவக் கல்வி மற்றும் பொது சுகாதாரத்துறைக்கு அபிஜித் சேத் ஆற்றிய சேவையை பாராட்டி இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளது. அதானி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின் நடக்கும் பட்டமளிப்பு விழாவாகும். இந்த விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், அதானி அறக்கட்டளையின் தலைவருமான டாக்டர் பிரீத்தி அதானி தலைமை தாங்கினார்.

மொத்தமகா 2,320 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது. அதில் 123 பேர் பிஎச்டி பட்டம் பெற்றனர். அதேபோல் சிறப்பாக படித்து பட்டம் பெற்ற மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்கள் அளிக்கப்பட்டன. அதேபோல் வேறு பிரிவுகளின் கீழ் 83 பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் பேசுகையில், நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்து வெற்றியை அளவிட கூடாது.

இந்த சமூகத்திற்கு நாம் எதை திருப்பி கொடுத்தோம் என்பதை வைத்தே வெற்றியை அளவிட வேண்டும். ஏனென்றால் இந்த பல்கலைக்கழகம் சமூகத்தின் உழைப்பால் உருவாக்கப்பட்டது. அந்த சமூகத்திற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது என்று ஊக்கப்படுத்தினார்.

இதன்பின் அதானி அறக்கட்டளையின் தலைவரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் பிரீத்தி அதானி பேசுகையில், நமது பல்கலைக்கழகத்திற்கு இது பெருமைமிக்க தருணம். அடுத்த 2 ஆண்டுகளில் மருத்துவமனையின் உட்கட்டமைப்பு மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். சிறந்த மருத்துவ உபகரணங்கள், அநவீன ஆய்வுகளுக்கான உட்கட்டமைப்புகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டு சேவைகளை வார்தா மற்றும் நாக்பூர் வளாகங்கள் கொண்டு வரவுள்ளோம்.

அதற்கான ஒரு பயண திட்டத்தை உருவாகக் உள்ளோம். நோய் தடுப்பு, குறைந்த செலவில் மருத்துவ சேவை மற்றும் குழந்தையின் உடல்நிலை உள்ளிட்டவற்றில் ஆய்வு செய்ய இருக்கிறோம். ஐநாவின் நிலையான இலக்குகளை அடிப்படையாக கொண்டு கல்வி, சுகாதாரம் மற்றும் ஆய்வு பணிகளை விரிவுப்படுத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.

100 மருத்துவ மாணவர்களுடன் தொடங்கப்பட்ட ஒரு நிறுவனத்திலிருந்து, தற்போது 260க்கும் மேற்பட்ட துறைப் படிப்புகளில் 14,000க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பல்கலைக்கழகமாக வளர்ச்சியை எட்டியுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேதா, பிசியோதெரபி, நர்சிங், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியது ஆகும்.