இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் உலக வங்கியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதை வரலாற்று சாதனை என அந்நாடு அறிவித்துள்ளது.
2027-ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெறவுள்ள உலக வங்கியின் வருடாந்திரக் கூட்டத்தில் தலைமை தாங்கும் பொறுப்புக்கு பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர் அஹத் கான் சீமா நியமிக்கப்பட்டுள்ளார். இதை 1953-க்குப் பிறகு பாகிஸ்தான் மீண்டும் பெறும் பொறுப்பு என அந்நாடு பெருமையாக குறிப்பிட்டுள்ளது
அதிகாரமல்ல
உலக வங்கியின் தலைமைப் பொறுப்பு அதிகாரமல்ல; அது ஆண்டுதோறும் மாறும் சம்பிரதாயப் பதவி என்று இந்தியாவின் முன்னாள் IMF நிர்வாக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
சுப்ரமணியன் தனது எக்ஸ் தளப் பதிவில், ‛ இந்தப் பொறுப்பு ஆண்டுதோறும் சுழற்சி முறையில் வழங்கப்படும் சம்பிரதாயப் பதவி தான். இதன் மூலம் IMF-இன் கடன் வழங்கும் முடிவுகளைக் கட்டுப்படுத்த முடியாது’ இவ்வாறு சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார்
கடனுக்காகக் காத்திருக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் தனது பொருளாதாரத் தேவைகளுக்காக IMF நிதியுதவியைத் தொடர்ந்து நம்பியுள்ளது. பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்தங்கள், காலநிலை மாற்றங்களை சமாளிப்பது போன்றவற்றிற்காக உலக வங்கிக் கடனை எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது
