மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன், பெரும்பாலான வீரர்களை விடுவிக்க, மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளது.
2021ஆம் ஆண்டில் இருந்தே மும்பை இந்தியன்ஸ் தொடர்ச்சியாக சொதப்பி வருவதுதான் இதற்கு முக்கிய காரணம். 2021ஆம் ஆண்டில் இருந்து, 6 சீசன்களில் ஒரு முறை கூட 3ஆவது இடத்தை கூட பிடிக்க முடியவில்லை. 2023, 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டுமே 4ஆவது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறினார்கள். இப்படி, தொடர்ச்சியாக சொதப்புவதால்தான், பெரும்பாலான வீரர்களை, ஐபிஎல் 2028 சீசனுக்கான மெகா ஏலத்திற்கு முன் விடுவிக்க முடிவு செய்துள்ளனர்.
முக்கிய வீரர்கள் நீக்கம்: இந்நிலையில், தரமான வீரர்களை கண்டுபிடித்து, பிளேயிங் 11-யை பலப்படுத்தும் வேலையை ரோஹித் சர்மாவிடம் மும்பை இந்தியன்ஸ் கொடுத்துள்ளது. குறிப்பாக, தரமான ஆல்ரவுண்டரை தேர்வு செய்யும் பணியையும் கொடுத்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றான தரமான ஆல்ரவுண்டர் குறித்து ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸிடம் பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தரமான ஆல்ரவுண்டர் நமன் தீர் தான். இவர் ஒரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக இருக்கிறார். இதில், கூடுதல் சிறப்பு இவரது பேட்டிங்தான். யூசுப் பதானுக்கு அடுத்து, பேட்டிங்கிலும் அதிரடி காட்டக் கூடிய ஆல்ரவுண்டராக யூசுப் பதான் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் போன்றவர்கள் இருந்தாலும், இவர்களால் தொடர்ச்சியாக பேட்டிங்கில் பெரிய அளவில் அதிரடி காட்ட முடியவில்லை. ஆனால், நமன் தீரால், 10 பந்துகளில் 30+ ரன்களை அடிக்க முடிகிறது.
மேலும், பந்துவீச்சிலும் அபாரமாக செயல்படுகிறார். ஸ்பின்னருக்கு சாதகமாக இல்லாத பிட்சில் கூட, சரியான லைன், லெந்தில் பந்துவீசி, நமன் தீர் அசத்தி வருகிறார். இதனால், நமன் தீரை அணியில் சேர்த்தால், ஒரு முழுநேர ஸ்பின்னர், ஒரு முழுநேர பேட்டர் செய்யும் வேலையை செய்ய முடியும். இதனால், ஒரு முழுநேர பௌலரை அல்லது பேட்டரை கூடுதலாக சேர்க்க முடியும் என்ற நிலைமை இருக்கிறது.
இதனால், நமன் தீருக்கு இனி டாப் ஆர்டரில் தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுத்து, அவரை பெரிய வீரராக வளர்த்துவிட வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் ரோஹித் சர்மா தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நமன் தீர், இதுவரை 5 சர்வதேச டி20 போட்டிகளில், இந்திய அணிக்காக விளையாடி, 292 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவித்து அசத்தியுள்ளார். மேலும், ஒரு போட்டியில், 31 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களையும் எடுத்து அசத்தியுள்ளார்.
ஐபிஎலில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, 27.31 சராசரி, 164.00 ஸ்ட்ரைக் ரேட்டில் 710 ரன்களை குவித்துள்ளார். இதில், மூன்று அரை சதங்களும் அடங்கும். இருப்பினும், இம்பாக்ட் வீரர் விதிமுறை காரணமாக நமன் தீருக்கு பந்துவீச போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இனி, நமன் தீருக்கு பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் போதிய வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், ஐபிஎல் 2027 சீசனில், இதனை சரியாக பயன்படுத்திக் கொண்டால், டி20 உலகக் கோப்பை 2028 தொடர், ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடர் ஆகியவற்றில் நமன் தீருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
