சென்னை முதல் உள் மாவட்டங்கள் வரை: இன்று மதியம் வெளுத்து வாங்கப்போகும் மழை? வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட் – north tamil nadu heavy rain alert delta weatherman issues update

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி தீவிரமடைய ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொட்டித் தீர்த்த மழை, பருவமழையின் தீவிரத்தை வெளிப்படுத்தியது.

இந்தச் சூழலில், நேற்று நள்ளிரவில் சென்னைக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. இந்நிலையில், வட தமிழகக் கடலோரத்தை நோக்கிக் காற்றுச் சுழற்சி திரும்பியிருப்பதால் இன்று நண்பகல் முதல் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வலுப்பெற்ற காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் சோமாலியா கடற்கரைப் பகுதிகளுக்கு அருகில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இது இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் நேரடியாகத் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்றாலும், தென்மேற்கு அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்வது ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் முதல் தமிழகத்தில் மீண்டும் கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நண்பகல் முதல் கனமழைபெய்ய வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இந்த மழை தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று பகல் நேரத்தில் மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில், இன்று நண்பகல் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

இன்று நண்பகல் முதல் தமிழகம் முழுவதும் பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதனால், சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் மழையின் தாக்கம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று மழையின் தீவிரம் குறைந்திருந்த நிலையில், வட தமிழகக் கடலோரத்தை நோக்கிக் காற்றுச் சுழற்சி திரும்பியிருப்பதாகக் கூறப்படும் சூழலில், இன்று நண்பகலுக்குப் பிறகு மழையின் நிலவரம் முக்கியத்துவம் பெறுகிறது.

Source link