பெண் வேடத்தில் நடிக்க மறுப்பு , திடீரென்று கதாநாயகனான பாண்டியராஜன்: ஆண்பாவம் படத்தின் ரகசியம்!

தமிழ் சினிமாவின் கிளாசிக் நகைச்சுவை திரைப்படங்களில் பட்டியலில் ‘ஆண்பாவம்’ படத்திற்கு முதல் ஐந்து இடங்களில் இடம் உண்டு. இந்த திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. அதற்குக் காரணம் 80- களின் காலகட்ட திரைப்படங்கள் பெரும்பாலும் ஏராளமான சண்டை காட்சிகள் மிக்க, பழிவாங்கும் கதைக்களத்தை கொண்டதாகவே இருந்தது. அதற்கு மாறாக ‘ஆண்பாவம்’ திரைப்படம் எந்த ஒரு வன்முறை காட்சிகளும், பழிவாங்கும் கதைக்களமும் இல்லாதது.

படத்தில் இருக்கும் சிறு கதாபாத்திரமும் எளிமையான நகைச்சுவை காட்சிகளுடன், இயல்பான வசனங்களை கொண்டு எடுக்கப்பட்டதால் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தில் பாண்டியன் கதாநாயகனாகவும் , பாண்டியராஜன் அவரது தம்பியாகவும் சீதா மற்றும் ரேவதி ஆகியோர் கதாநாயகிகளாகவும் நடித்திருந்தனர். மேலும் விகே.ராமசாமி , கொல்லங்குடி கருப்பாயி, ஜனகராஜ் , பூர்ணம் விஸ்வநாதன் , உசிலைமணி, ஓமக்குச்சி நரசிம்மன் உள்ளிட்ட பல குணச்சித்திர நடிகர்களும் நடித்திருந்தனர்.

Source link