பட்டினப்பாக்கத்தை கைவிடும் தவெக அரசு: தீவுத் திடலுக்கு மாறும் புதிய தலைமைச் செயலகம்?- அரசியல் ரீதில் முதல்வர் விஜய்யின் முக்கிய நகர்வு – tvk govt shift to pattinapakkam new secretariat project to island grounds

சென்னை பட்டினப்பாகக்த்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்புகள் கிழம்பிய நிலையில், மாற்று இடம் அரசு தேடியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தீவுத்திடலில் 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்லவன் ஹவுஸ் வளாகத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசு புதிய தலைமைச் செயலகம் அமைக்க உள்ளதாக கடந்த மாதம் அரசாணை வெளியானது. இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள், மீனவர்கள் மற்றும் தவெக அரசுக்கு ஆதரவு அளித்த இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்தச் சூழலில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட்டதாகவும், தற்போது மாற்று இடம் அரசு தேடியதில், தீவுத்திடலில் 13.22 ஏக்கர் பரப்பளவு கொண்ட பல்லவன் ஹவுஸ் வளாகத்தைப் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

MTC வளாகத்தில் அமைகிறதா?

இந்த வளாகத்தில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (MTC) மற்றும் அரசு விரைவுப் பேருந்துப் போக்குவரத்துக் கழகம் (SETC) ஆகியவற்றின் தலைமைச் செயலகம் மற்றும் விசாலமான இடம் கொண்டுள்ளது. மேலும் இந்த இடம் நகரின் முக்கிய மற்றும் போக்குவரத்து வசதி நிறைந்துள்ளதால், இங்கு தலைமைச் செயலகம் அமைக்க உறுதி செய்யப்படலாம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமைச் செயலகம் – கடந்து வந்த பாதை

முதல்வர் அறிவிப்பு

கடந்த ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் தமிழக சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்தச் சூழலில் கடந்த செப்டம்பர் 3 ஆம் தேதி விதி எண் 110-ன் கீழ், முதல்வர் விஜய் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதில், சென்னையில் ரூ.1200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

நிதி நெருக்கடி

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழகத்தின் அரசு நிதி நெருக்கடியைக் கவனத்தில் கொண்டு அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

அரசாணை வெளியீடு

முதல்வர் அறிவித்த ஒரே வாரத்தில் சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என அரசு ஆணை வெளியிட்டது.

எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இந்த ஆணை வெளிவந்தது முதல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பட்டினப்பாக்கம் கடும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி எனவும், குறுகிய சாலை வசதிகள் கொண்ட இடம் எனவும், மேலும் பள்ளிகள் நிறைந்த பகுதி எனவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்படும் புதிய தலைமைச் செயலகத்தில் பூர்வகுடி மக்களான மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனப் போர்க்கொடி தூக்கினர்.

தீவுத் திடலுக்கான காரணம் என்ன

தீவுத் திடல் அருகே தலைமை செயலகம் அமைக்கபடுவது அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வசதியாகவும் மற்றும் உதவியாகவும் இருக்குமே கூறப்படுகிறது. பஸ், மின்சார ரயில், மெட்ரோ ரயில் என சென்னையின் அனைத்து முக்கிய போக்குவரத்து வசதிகளையும் அருகாமையில் கொண்டுள்ளது. மக்கள் எளிதாக சென்று வர முடியும் அருகாமையில் பல அரசு அலுவகங்கள் அமைந்துள்ளது. இதனால் மக்கள் அலைச்சல் குறையும்

விஜய்க்கு சாதகமா?

இந்த இடம் ஏற்கனவே அரசு கட்டுப்பாட்டில் இருக்க கூடிய இடம் என்பதால், இதில் பிரச்சனைகள் எதும் ஏற்படாது. அதுபோல கூடுதல் நிலம் கைப்படத்த வேண்டிய தேவை இல்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்க மாட்டார்கள் என்பதால் இது முதல்வர் விஜய்க்கு அரசியல் பாதிப்பு மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறப்படுகிறது.

Source link