சென்னையில் பெட்ரோல் – டீசல் இன்றைய விலை நிலவரம்
சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விஜய் ஒப்புதலுடன் சட்டத்திருத்தம் – நிர்மல் குமார் உறுதி
முஸ்லிம் மதத்திற்கு மாறிய இந்துக்களின் இட ஒதுக்கீடு குறித்த அரசாணை சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய் ஒப்புதலுடன் மீண்டும் சட்டத் திருத்தம் செய்யவுள்ளோம். அரசாணை கொண்டுவந்தபோதே சிறு சட்டத் திருத்தம் செய்திருந்தால் போதும். அதனை முந்தைய ஆட்சியாளர்கள் செய்யத் தவறிவிட்டனர் என்றார்.
-
Oct 19, 2026 11:02 IST
10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், தேனி, நீலகிரி, திருப்பூர், கோவை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
