கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை- மக்கள் பாதுகாப்பா இருக்கவும் – flood warning issued for krishnagiri dharmapuri and tiruvannamalai districts on oct 19th

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேஆர்பி அணை க்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் கிருஷ்ணகிரி , தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 50 அடி கொண்ட கேஆர்பி அணை 50 அடியை கடந்துள்ளது. மேலும் அணைக்கு நீர் வரத்து 1,859 கனஅடியாக உள்ளது. இதனால் கேஆர்பி அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 2,415 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க அறிவித்தப்பட்டுள்ளனர்.

கேஆர்பி அணை

கேஆர்பி அணை என்பது தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள துடுகனஹள்ளி கிராமத்திற்கு அருகில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு அணையாகும். இந்த அணை கிருஷ்ணகிரியிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் , தர்மபுரிக்கும் கிருஷ்ணகிரிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது கிருஷ்ணகிரியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குகிறது. இந்த அணை 1957 கட்டப்பட்டு, அப்போதைய தமிழக முதலமைச்சர் கே. காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது .

வடகிழக்கு பருவமழை தாக்கம்

தமிழகத்தில் சூப்பர் எல்நினோ தாக்கத்தல் அணைகள் வரண்டு, போதிய நீர் இன்றி விவசாயிகள் பெரிதும் கவலையடைந்தனர். இந்த சூழலில் தற்போது வடகிழக்கு பருமழை தொடங்கி தமிழகத்தில், சென்னை, கோவை, நீலகிரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருவாரூர், திருவள்ளூர், உள்ளிட்ட பல்வேறு மாட்டங்களில் பெய்து வருகிறது. அதுபோல கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களின் எல்லைகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் அணைகள் வேகமாக நிறைந்து வருகிறது.

Source link