நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், யோகிபாபு, வித்தியா பாலன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 15-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே ரூ.100 கோடியை தாண்டியது.
ஆயுத பூஜை விடுமுறை எதிரொலி: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்; முழு விபரம்
நவராத்திரி விடுமுறையை ஒட்டி ‘ஜெயிலர் 2’ திரைப்படம் கலெக்ஷனில் கலக்கி வருகிறது. ரிலீஸான முதல் வார இறுதியிலேயே பாக்ஸ் ஆபிஸில் வரலாற்றுச் சாதனை படைத்து, 2026-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் ரூ.144 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, உலகம் முழுவதும் ரூ.321 கோடி வசூலை ஈட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, ’ஜெயிலர் 2’ திரைப்படம் உலக அளவில் ரூ.360 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து விஜயின் ‘ஜனநாயகன்’ வசூலை முந்தியுள்ளது. ’ஜனநாயகன்’ திரைப்படம் உலக அளவில் ரூ.324 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
‘ஜெயிலர்’ சாதனையை ‘ஜெயிலர் 2’ முறியடிக்குமா?
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.605 கோடி வசூல் செய்தது. இந்நிலையில், தற்போது வெளியான ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தனது முதல் வார இறுதியில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 400 கோடி வசூலை தாண்டியுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘ஜெயிலர்’ முதல் பாகத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், நவம்பர் 5-ஆம் தேதி ‘ராமாயணம்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் அதுவரை ‘ஜெயிலர் 2’ திரைப்படத்திற்கு வசூலை குவிக்க அவகாசம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
